Tag: சிம்பொனி
-
மாஃலரின் சிம்ஃபொனி – இறப்பும் இருப்புமான குழப்பமற்ற தெளிவின்மை
“நாற்றிசையும் நீளும் கதிர்கொள்ளிகள் நடுவே அணையாது எரியும் பரிதி இருள்” – சாவு (பிரமிள்) மாஃலரைப் (Gustav Mahler 1860-1911) போன்ற இசைஞரின் உலகிற்குள் முழுவதுமாக சென்றடைதல் எவ்வாறு அல்லது எப்போது கைக்கூடுகிறது? மிகச்சிறந்த இசைஞர்கள் சிறிது சிறிதாக கட்டியெழுப்பும் தனித்துவமான நுண்ணுலகம் நாளடைவில் கிட்டத்தட்ட தூலமானதாகிவிடுகிறது. அழகியல், வடிவமைப்பு, ஒலிநயம் என இசைமொழி துவங்கி, அதன் அகவெளிக்குள் நுழைவது என்பது ஒரு வேற்றிடத்திற்கு குடிபெயர்ந்து பழக்கப்படுவதைப் போன்ற சிக்கல்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. சில இசையுலகங்களில் இந்த…
-
பகுதி 24: முரணிசையிலிருந்து ஒத்திசைவிற்கான நகர்வு
இது வரையில் நாம், மேற்கின் மத்திய காலத்தில் உருவாகி, மறுமலர்ச்சி காலத்தில் வலுப்பெற்று, Baroque காலத்தில் உச்சமடைந்த Counterpoint இசை குறித்தும், அக்காலத்தின் முக்கிய இசைவடிவங்கள் குறித்தும் கண்டோம். Counterpoint இசையின் உரையாடல் வடிவம். இசையில் சிந்திக்க மனிதன் துவங்கிய போது, இசையின் எண்ண வடிவான Musical Motif வலுப்பெற்ற உடன், அதனைக் கொண்டு கருத்தைச்சொல்லவும், அதற்கு சார்பாகவும், எதிராகவும் கருத்துக்களை அடுக்கி அதனைப் பல்லிழை இசையாக மாற்றிய இசையமைப்பு முறை Counterpoint. இந்த இசைநுட்பத்தின் விளைவாகத்…
-
பகுதி 20: இளையராஜாவின் திருவாசக Oratorio
சென்ற பகுதியில், மேற்கின் தேவாலயங்களில் கருவிகளின் சேர்ந்திசையும், குரலிசையுமென அரங்கேற்றப்படும் Oratorio இசை வடிவத்தின் பண்புகள் குறித்துக் கண்டோம். தமிழில் சேர்ந்திசையின் சுவடுகள் தமிழிசையின் சுவடுகளை நாம் தொல்காப்பியத்தில் காண்பது குறித்து முந்தைய பகுதிகளில் கண்டோம். பிறகு யாழும், பாணரும், குழலும், இசைபாடலும் வலம்வரும் இசைச்செய்திகள் சங்கப்பாடல்களில் நிறைந்துள்ளன. தமிழிசையின் இரண்டாம் காலமான, சிலம்பின் காலத்திற்கு (2-5ம் நூ) வரும் போது, நமக்கு முழுமையான ஒரு இசைமுறை காணக்கிடைக்கிறது. சுரங்கள், சுரங்களை தோற்றுவிக்கும் முறைகள், சுர வெளிப்பாட்டு…
-
பகுதி 19 – Oratorio இசைவடிவம்
I did think I did see all heaven before me, and the good God himself – Handel on Composing Messiah சென்ற பகுதியில் இசைவடிவங்களை சரியாக அணுகவேண்டியதன் தேவை குறித்து கண்டோம். இன்று நாம் இசைவடிவங்களை அணுகுவதன் சிக்கல்களுள் ஒன்று எண்ணிக்கை சார்ந்தது. மேற்கின் இசைவடிவங்கள் என்று எடுத்துக்கொண்டால் , நாம் நூற்றுக்கணக்கான இசைவடிவங்களைக் காண வேண்டி இருக்கும். சுமார் ஆயிரம் ஆண்டுகளாக பல்வேறு இசைப்பண்பாடுகளின், இசைத்தத்துவங்களின் விளைவாக இவை…
-
பகுதி 18: Counterpoint இசை வடிவங்கள்
We do not have knowledge of a thing until we have grasped its why, that is to say, its cause, what caused its origin – Aristotle கிறித்தவ மடங்களில் இசைக்கப்படும் (Chant) பஜனை இசையில் சுவாரசியத்திற்காக ஒருவர் பாடுவதை மற்றவர் வேறு சுருதியில் பாட, இரு இழைகளிலான Counterpoint இசை துவங்குகிறது. பிறகு இரு இழைகளும் தாளத்தில் முரண்படத்துவங்குகின்றன. பிறகு இசையின் எண்ண வடிவான Motif பயன்பாட்டின்…