Category: நவீன இசை
-
ISIS – Panopticon (2004)
முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த ISIS (ஐசிஸ்) ஒரு அமெரிக்க இசைக்குழு. 1997 முதல் 2009 வரை இயங்கி, ஐந்து அருமையான இசைத்தொகுப்புகளை வழங்கிய மெட்டல் இசைக்குழு. இவர்களுக்கும் இன்று ஐசிஸ் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரும் தீவிரவாத குழுவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இணையத்தில் தேடுவடதே சிக்கலாகும் ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்தது இவர்களின் துரதிஷ்டமா அல்லது தங்கள் இசை குழுவிற்கு பெயிரிட இவர்கள் தேர்ந்தெடுத்த எகிப்திய பெண் தெய்வமான ஐசிஸின் துரதிருஷ்டமா… மெட்டல் இசைக்குத்…
-
தொகுப்பு: Leaves Turns Inside You (2001)
இசைக்குழு: Unwound ஒரு இசை வகைமையின் காலசுழற்ச்சியில் பல்வேறு இசைக்குழுக்கள் முக்கிய இடம்பெறுகின்றன. அதன் தோற்றத்திற்குக் காரணமான குழுக்கள், அதன் செழுமைக்குக் காரணமான குழுக்கள், அதனை மக்களிடம் எடுத்துச் சென்றவை, அதனைத் தோல்வியுறச் செய்தவை என பல்வேறு குழுக்கள், ஒரு வகைமையின் அடையாளமாகின்றன. இதில் ஒரு வகைமையின் உச்சிகாலத்தில் அதன் போக்கில் மூழ்கிவிடாமல் அதிலிருந்து விலகி தனித்து, முற்றிலும் வேறு கோணத்தில் அவ்வகைமையினை அணுகும் குழுக்கள் விசேஷமானவை. அவையே அந்த வகைமையின் பரிணாம வளர்ச்சிக்கு வித்திடுபவை. Slint குழுவின்…
-
தொகுப்பு: Ágætis Byrjun (2000)
குழு: Sigur Ros மிகப்பெரிய திறமைகளும், இசை விற்பன்னர்களும் நிறைந்த நவீன மேற்கத்திய இசையுலகில், புதிய முயற்சிகளுக்கும், இசை அனுபவங்களுக்கும் பஞ்சமில்லை. எனவே இதில் புதிய என்பது ஒருவகையில் வழக்கமான ஒன்று தான். இல்லாவிட்டால் தான் அதிசயம். இத்தகைய முனைப்பான சூழலில் முற்றிலும் தனித்துவமாக ஒரு முயற்சி அமைந்து அசரடிப்பது மிக உற்சாகமான ஒரு நிகழ்வு. அதுவும் நாம் எதிர்பார்க்கும் குழுக்களும், ஜாம்பவான்களும் புதிய இசைக்காக தவமாய்தவமிருக்கும் போது, விளையாட்டாக (Sigur Ros போல) முற்றிலும் எதிர்பாராத திசையில், வகையில்…
-
தொகுப்பு: In Absentia (2003)
குழு: Porcupine Tree Progressive Rockன் பொற்காலம் 1960s,1970s தான். King Crimson, Yes, ELP, Genesis என இவ்வகைமையின் முக்கிய கலைஞர்கள் கோலோச்சிய காலம் அது. ஒவ்வொரு வகைமையும் அதற்கு முன்பிருந்த பாணியின் போதாமைகளைக் கொண்டே உருவாகிறது, நிலைபெறுகிறது. தனக்கே தெரியாமல் தன்னிலும் ஒரு போதாமையை உருவாக்கி விடுகிறது. Classical Rock இசையின் வெகுஜனத்தன்மை, கலையம்சத்தின் போதாமை – இவையே Progressive Rockன் மூலாதாரம். ஆனால் இதன் ஆரம்பங்கள் Classical Rock குழுக்களான Beatles, BeachBoys போன்றோரிடமும்…
-
தொகுப்பு: Downtown battle mountain (2007)
குழு: Dance gavin dance நவீன மேற்கத்திய இசையின் முதன்மையான அடையாளங்களில் ஒன்று இரைச்சல். இசை என்றாலே ஒலிகளின் இசைதல், இனிமை என்ற நேர்கோடான சிந்தனைக்கு மாற்றாக ஒவ்வாமையை, இரைச்சலை நவீன இசை முன்னிறுத்துகிறது. இது எல்லாவற்றையும் புரட்டிப்பார்க்கும் மனிதகுணத்தின் முயற்ச்சியாக ஆரம்பித்தாலும், இரைச்சல் மிக இயல்பான இசைமொழியாக மாறியிருக்கும் காலமிது. இனிமை இயல்பற்றதோ என சந்தேகம் வரும் அளவிற்கு. இரைச்சலை பிரதானமாக கையாளுபவை Rock, Punk(Hardcore), Metal போன்ற வகைமைகளும் இவற்றின் உபகிளைகளுமே. இதில்…