Category: செவ்விசை
-
மாஃலரின் சிம்ஃபொனி – இறப்பும் இருப்புமான குழப்பமற்ற தெளிவின்மை
“நாற்றிசையும் நீளும் கதிர்கொள்ளிகள் நடுவே அணையாது எரியும் பரிதி இருள்” – சாவு (பிரமிள்) மாஃலரைப் (Gustav Mahler 1860-1911) போன்ற இசைஞரின் உலகிற்குள் முழுவதுமாக சென்றடைதல் எவ்வாறு அல்லது எப்போது கைக்கூடுகிறது? மிகச்சிறந்த இசைஞர்கள் சிறிது சிறிதாக கட்டியெழுப்பும் தனித்துவமான நுண்ணுலகம் நாளடைவில் கிட்டத்தட்ட தூலமானதாகிவிடுகிறது. அழகியல், வடிவமைப்பு, ஒலிநயம் என இசைமொழி துவங்கி, அதன் அகவெளிக்குள் நுழைவது என்பது ஒரு வேற்றிடத்திற்கு குடிபெயர்ந்து பழக்கப்படுவதைப் போன்ற சிக்கல்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. சில இசையுலகங்களில் இந்த…
-
இரு தலைமுறைகள் ஒரு துணுக்கிசை
1761 வருடத்தில் தனது 29 வயதில் ஜோசஃப் ஹைடன், ஆஸ்திரியா நாட்டின் பணக்காரக் குடும்பமான ‘எஸ்தர்ஹாசி’ (Esterhazy family) குடும்பத்தில் உதவி இசை-ஒருங்கிணைப்பாளராகத் தேர்வாகிறார். எந்த செவ்விசைப்பின்னணியும் இல்லாத குடும்பத்தில், வண்டிச்சக்கரங்களை பழுதுபார்க்கும் மாத்தியாஸ் ஹைடனுக்கு மகனாகப் பிறந்து, கொஞ்சம் கொஞ்சமாக இசை கற்று, பிறகு பகுதி நேர இசைப்பணிகளுக்காக அல்லாடிய ஹைடனுக்கு, ஐரோப்பாவின் மிகப்பணக்கார குடும்பங்களுள் ஒன்றான ‘எஸ்தரஹாசி’ குடும்பத்தில் வேலை கிடைத்தது பெரும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். அவ்வருடம் துவங்கி, சுமார் 30…
-
பீதோவன் முடிவும் ஸ்ட்ராஸ் துவக்கமும்
பீதோவன் என்ற பெயரோடு பொதுவாக நினைவுக்கு வருவது அவரது சிம்ஃபொனி இசை. இன்று உலகம் முழுதும் அவரது ஒன்பது சிம்ஃபொனி இசைத்தொகுப்புகள் பிரபலமானவை. ஆனால் அவரது இசைப்படைப்புலகின் மையமாக கருதப்படவேண்டியவை, அவர் இயற்றிய பியானோ சொனாட்டாக்கள். பீதோவன் மொத்தம் முப்பத்தியிரண்டு சொனாட்டாக்களை இயற்றியுள்ளார். இவை அவரது வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் இயற்றப்பட்டவை. அவரது இசை மற்றும் ஆன்மத் தேடலின் வெளிப்பாடாக விளங்குபவை. ஹைடனின் மாணவரான அவர், தனது இருபத்தைந்தாவது வயதில் முதல் சொனாட்டாவை இயற்றுகிறார். ஆசிரியரிடத்தில் சில…