Category: இளையராஜா
-
பகுதி 5: பிற்கால தமிழிசை வரலாறு
சென்ற பகுதியில் தமிழிசையின் துவக்கங்கள் குறித்துப் பார்த்தோம். தமிழிசையின் துவக்கங்களை, சுரஅமைப்பினை அடிப்படையாகக் கொண்ட தமிழ் மெய் எழுத்துக்களின் கட்டமைப்பின் மூலம் தொல்காப்பியம் தெளிவாகக் காட்டுகிறது. பிறகு சிலப்பதிகாரம் அக்காலத் தமிழ் இசையை (கி.பி. 2-5) விரிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. தமிழின் சுரங்களும், சுர வரிசைகளும், சுர அமைப்பு முறையும், பண்கள், திறங்கள், சுர அழகியல் நுட்பங்கள் என ஒரு Melodic இசைக்குத் தேவையான அனைத்து சட்டகங்களும் சிலப்பதிகார காலத்தில் தமிழில் நடைமுறையில் இருந்தது தெரிகிறது. இவ்வகையில்…
-
பகுதி 4: தமிழ் எனும் இசைமொழியும் ஆதித் தமிழிசை வரலாறும்
சென்ற இரு பகுதிகளில், இரு தொன்மையான இசைப் பண்பாடுகளான, கிரேக்க மற்றும் சமஸ்கிருத இசைப்பண்பாடுகள் குறித்துப் பார்த்தோம். மக்களிடம் தோன்றும் இசை (சில இசைப்பண்பாடுகள் தங்களை தெய்வீகமாக உருவாகியவை என்றுச் சொன்னாலும்), உலகெங்கும் பழங்காலத்திலிருந்தே ஒரு அறிவுத்துறையாக, செவ்விசை இயக்கமாக வளர்கிறது. உலகின் பழம்பெரும் பண்பாடுகளின் ஒரு முக்கிய அடையாளமாகவே இசை விளங்குகிறது. இதனைப் பார்க்கும் போது, உலகின் தொன்மையான பண்பாடுகளுள் ஒன்றான தமிழில் இத்தகைய ஒரு செவ்விசைப்பண்பாடு இருந்ததா இல்லையா என்ற கேள்வி நமக்குத் தோன்றும். இந்த கேள்விக்கான…
-
பகுதி 3: செவ்விசை பொற்காலங்கள் – மேற்கும், கிழக்கும்
இசையின் வரலாறு என்பது இசையின் மூலப்பொருட்கள் உருவாகும் வரலாறு மற்றும் அதனடிப்படையில் தோன்றும் இசை வடிவங்களின் வரலாறே (history of musical material and forms). சென்ற பகுதியில் நாம் பார்த்தது மேற்கிசையின் மூலப்பொருட்களின் வரலாறு. மேற்கிசையின் பொற்காலம் குறித்த இந்தப் பகுதியில் நாம் பார்க்க இருப்பது மேற்கிசையின் வடிவங்களின் வரலாறு. மேற்கிசையின் பொற்காலத்திற்குள் நுழைவதற்கு முன்னால், அதன் மைய தத்துவமாகச் சொல்லப்படும் Harmony என்றால் என்ன எனப்பார்ப்போம் Harmony மற்றும் Melody: Melody என்பதை மெல்லிசை…
-
பகுதி 2: மேற்கத்திய செவ்விசை – துவக்கங்கள்
The heavenly bodies are nothing but a continuous song for several voices (perceived by the intellect, not by the ear) – Kepler , Harmonica Mundi சென்ற கட்டுரையின் நோக்கத்தின்படி, ராஜாவையும் நமது இசைச்சூழலையும் அணுகுவதற்குத் தேவையான இசை வரலாறுகளுக்குள் செல்வோம். முதலில் மேற்கத்திய செவ்விசை வரலாற்றில் துவங்கலாம். செவ்வியல் என்றாலே பழைய என்ற கண்ணோட்டம்தான் நமக்கு உண்டு. அதே வேளையில் செவ்வியல் படைப்புகள் காலம் கடந்தும் அதன் தன்மையை…
-
பகுதி1: இளையராஜா எனும் இசையியக்கம்
இளையராஜாவின் பாடல்கள் பேரிசையியக்கங்களின் சுருக்கக் குறிப்புகளாக விளங்குகின்றன – பிரேம் ரமேஷ் (இளையராஜா – இசையின் தத்துவமும் அழகியலும் நூலில்) பிரேம் ரமேஷின் புத்தகத்தை முதலில் படித்த போது இசையை முறையாகக் கற்கவில்லை. பிறகு கற்கத் தொடங்கிய காலத்திலிருந்து இவ்வரிகள் நினைவுக்கு வராமல் இருந்ததில்லை. மேற்கத்திய செவ்விசை பயிற்சி தொடர்பாக கடந்த சில மாதங்களாக Bach இசையமத்த Cantatas எனும் வகை பாடல்களை கேட்டு வருகிறேன். இத்தொகுப்புகளில் பல்வேறு இடங்களில் ராஜா நினைவுக்கு வருவது உண்டு. பதங்களாக, துணுக்குகளாக, வடிவ…