Category: இளையராஜா
-
நம் கண்பார்த்தும் கவனமில்ல
<> ராஜாவின் பாடல்கள் வாசிக்க கடினமானவை என்பது இசையைக் கற்பதற்கு முன்னால் இருந்த முழுமுடிவு. பிரமிப்பான எதுவுமே நமக்கு அப்பாற்பட்டதாகவும், அவ்வாறு அப்பாற்பட்டதாக இருந்தால்தான் நமக்கு பிரமிப்பும் என்பதுதானே வழக்கு. ஆனால் உண்மையில் இசை கற்கத்துவங்கிய சில மாதங்களிலேயே ஆற்றொழுக்கொடு இல்லாவிட்டாலும், பாடலின் சுரங்களை ஒருவாறு அனுமானித்து சேர்த்து, அவரது பாடல்கள் வாசிக்கக் கைக்கூடின. இங்கே குறிப்பது பாடல்களின் மையக்குரலிழை (vocal melody) மட்டுமே. முன்னிசை, இடையிசை, பாடல் பின்னணியிசை போன்றவை கருவியிசைக்கென அமைக்கப்பட்டவை, ஒப்பிட தேர்ச்சியைக்…
-
PODCAST SERIES: Ilaiyaraaja – a musical movement
Please visit links below for the Podcast series Spotify – Ilaiyaraaja : A Musical Movement Chapter Synposis Part 1 – Introduction Personal Connect – Film Music and the Need for a different look at it – Agenda of the Series Part 2 – Brief History of Music Music – God or Man made – Early…
-
பகுதி 27 : பல்லவியிலியிலிருந்து சரணத்திற்கு சென்று சேர்க்கும் இடையிசை
பனிவிழும் இரவு பாடலின் பல்லவியின் அமைப்பையும், இயக்கத்தையும் குறித்துக் கண்டோம். இப்பல்லவியானது இசையின் சொற்றொடர் அமைப்புகளுள் ஒன்றான, Sentence வகையினைச் சார்ந்தது. Sentence வகையிலான இசைச்சொற்றொடர், தோற்றம், வளர்ச்சி, மறைவு எனும் பகுதிகளைக் கொண்டது. தோற்றப் பகுதி கருப்பொருளை வழங்குகிறது, பிறகு அக்கருப்பொருள் வளர்க்கப்படுகிறது, பிறகு நிறைவு செய்யப்படுகிறது. பனிவிழும் இரவு பாடலின் பல்லவி இம்மூன்று பகுதிகளையும் அவற்றின் இயக்கத்தையும் எவ்வாறு கொண்டமைகிறது எனக் கண்டோம். இனி அதன் சரணத்தின் அமைப்பையும் இயக்கத்தையும் குறித்து காண உள்ளோம்.…
-
பகுதி 26: பல்லவியின் அமைப்பும் இயக்கமும்
சென்ற பகுதியில், பலதள இசையிலிருந்து இரு தள இசையாக மாறும் Classical கால இசையின், பின்னணி தளமாகிய Harmony குறித்துக் கண்டோம். இசையின் கீழ்தளமான Harmony, மேல்தளத்திற்கான சூழலை உருவாக்கும் தளமாகிறது. சுரங்களைக் கூட்டாக (Chords) இசைப்பதன் மூலம் ஒரு தொனிமையத்தை, அதன் மூலம் ஒரு ஈர்ப்பை Harmony உருவாக்குகிறது என்றும், அத்தகைய ஈர்ப்பு அல்லது விலக்கத்தை எவ்வாறு வளர்க்கிறது என்றும், எவ்வாறு நிறைவு செய்கிறது என்றும் கண்டோம் (Tension and resolution of Tension). இப்பகுதியில்…
-
பகுதி 25: Harmony – அடித்தளம் மற்றும் விரிவாக்க முறைகள்
“Watch the Harmony….Watch the Bass line….Watch the Root progressions” – Arnold Schoenberg மேலுள்ள துணுக்கைக் கேட்கும் போது, பாடல்வரிகளைக் கடந்து, உணர்வனுபவங்களைக் கடந்து, கருவி மற்றும் குரலின் வண்ணப் பூச்சுக்களைக் கடந்து, மேலுள்ள வெறும்கூடான ஒலியனுபவத்தில், ஒரு ஒழுங்கும், முதலில் இருந்து இறுதி வரை குழப்பமற்ற சீரான ஓட்டமும் கொண்டதாக நம்மால் உணர முடிகிறதல்லவா. தனக்கான துவக்கப்புள்ளிகள் (“பனிவிழும் இரவு”), உச்சப்புள்ளிகள் (“தனிமையே போ இனிமையே வா”), நிறைவுப்புள்ளிகள் (“நீரும்,வேரும் சேர வேண்டும்”)…
-
பகுதி 24: முரணிசையிலிருந்து ஒத்திசைவிற்கான நகர்வு
இது வரையில் நாம், மேற்கின் மத்திய காலத்தில் உருவாகி, மறுமலர்ச்சி காலத்தில் வலுப்பெற்று, Baroque காலத்தில் உச்சமடைந்த Counterpoint இசை குறித்தும், அக்காலத்தின் முக்கிய இசைவடிவங்கள் குறித்தும் கண்டோம். Counterpoint இசையின் உரையாடல் வடிவம். இசையில் சிந்திக்க மனிதன் துவங்கிய போது, இசையின் எண்ண வடிவான Musical Motif வலுப்பெற்ற உடன், அதனைக் கொண்டு கருத்தைச்சொல்லவும், அதற்கு சார்பாகவும், எதிராகவும் கருத்துக்களை அடுக்கி அதனைப் பல்லிழை இசையாக மாற்றிய இசையமைப்பு முறை Counterpoint. இந்த இசைநுட்பத்தின் விளைவாகத்…
-
பகுதி 23: இளையராஜாவின் Mad Mod Mood Fugue
Fugue இசை குறித்த முந்தைய பகுதி : பகுதி 22 – Fugue இசைவடிவம் Fugue இசைவடிவம் – அமைப்பு Fugue ஒரு பல்லிழை இசைவடிவம் (Polyphonic form). Fugue இசையின் துவக்கத்தில், முதல் இழை ஒரு பாடற்பொருளில் (subject) துவங்குகிறது. அது முடியும் போது இரண்டாவது இழையும் அதே பாடற்பொருளை பதிலாக வழங்குகிறது. ஆனால் வேறு சுருதியில் (key). இவ்வாறு இரண்டாவதாக வேறு சுருதியில் வரும் Subject பகுதி, Answer எனப்படுகிறது. இங்கு நாம் சென்ற பகுதியில்…
-
பகுதி 22: Fugue இசைவடிவம்
இது Bach இயற்றிய ஒரு Fugue துணுக்கு. சிறிய துணுக்கு எனினும் நமக்கு அனேகமானவற்றைத் தெரிவிக்கிறது. இதனைத் தெரிந்து கொள்ள Fugue இசைவடிவம் குறித்து முதலில் காண்போம். மேற்கிசையின் அதி நுட்பமான இசைவடிவமாக Fugue கருதப்படுகிறது. அ Sonata மற்றும் Fugue ஆகிய இரு இசைவடிவங்களே மேற்கிசையின் மையமான இசைவடிவங்கள் எனக் கொள்ளத்தக்கவை. மறுபுறம் Baroque காலத்தின் இறுதியில் (1700-1750 AD), பிற்கால மேற்கிசையின் மைய இசைச்சிந்தனையான Tonality (தொனியியல்) உருப்பெறத் துவங்கிய காலகட்டத்தில், தொனியியல் இசையின் மதகுகளைத் திறக்க…
-
பகுதி 21: இளையராஜாவின் இசையில் Concerto
Baroque காலத்தின் மைய இசைவடிவங்கள் குறித்து நினைவுபடுத்த இந்த அட்டவணை மீண்டும். இக்குறிப்பிட்ட வடிவங்களில், சென்ற பகுதியில், Baroque கால சார்பிசை (aesthetic form) வடிவமான Oratorio குறித்தும், அதனை இளையராஜாவின் திருவாசகம் எவ்வாறு வழங்குகிறது என்பது குறித்தும் கண்டோம். Concerto இசைவடிவம் Oratorio எனும் குரலிசை பக்தியிசை வடிவம் Baroque காலத்தில் பெருவடிவமாக வளர்ந்தாலும், குரலிசையும் பகுதியிசையும் கிரேக்க காலம், தேவாலய காலம், மத்திய காலமென ஒரு நெடுங்கால தொடர்ச்சியைக் கொண்டவை. நேர்மாறாக Concerto மற்றும்…
-
பகுதி 20: இளையராஜாவின் திருவாசக Oratorio
சென்ற பகுதியில், மேற்கின் தேவாலயங்களில் கருவிகளின் சேர்ந்திசையும், குரலிசையுமென அரங்கேற்றப்படும் Oratorio இசை வடிவத்தின் பண்புகள் குறித்துக் கண்டோம். தமிழில் சேர்ந்திசையின் சுவடுகள் தமிழிசையின் சுவடுகளை நாம் தொல்காப்பியத்தில் காண்பது குறித்து முந்தைய பகுதிகளில் கண்டோம். பிறகு யாழும், பாணரும், குழலும், இசைபாடலும் வலம்வரும் இசைச்செய்திகள் சங்கப்பாடல்களில் நிறைந்துள்ளன. தமிழிசையின் இரண்டாம் காலமான, சிலம்பின் காலத்திற்கு (2-5ம் நூ) வரும் போது, நமக்கு முழுமையான ஒரு இசைமுறை காணக்கிடைக்கிறது. சுரங்கள், சுரங்களை தோற்றுவிக்கும் முறைகள், சுர வெளிப்பாட்டு…
-
பகுதி 19 – Oratorio இசைவடிவம்
I did think I did see all heaven before me, and the good God himself – Handel on Composing Messiah சென்ற பகுதியில் இசைவடிவங்களை சரியாக அணுகவேண்டியதன் தேவை குறித்து கண்டோம். இன்று நாம் இசைவடிவங்களை அணுகுவதன் சிக்கல்களுள் ஒன்று எண்ணிக்கை சார்ந்தது. மேற்கின் இசைவடிவங்கள் என்று எடுத்துக்கொண்டால் , நாம் நூற்றுக்கணக்கான இசைவடிவங்களைக் காண வேண்டி இருக்கும். சுமார் ஆயிரம் ஆண்டுகளாக பல்வேறு இசைப்பண்பாடுகளின், இசைத்தத்துவங்களின் விளைவாக இவை…
-
பகுதி 18: Counterpoint இசை வடிவங்கள்
We do not have knowledge of a thing until we have grasped its why, that is to say, its cause, what caused its origin – Aristotle கிறித்தவ மடங்களில் இசைக்கப்படும் (Chant) பஜனை இசையில் சுவாரசியத்திற்காக ஒருவர் பாடுவதை மற்றவர் வேறு சுருதியில் பாட, இரு இழைகளிலான Counterpoint இசை துவங்குகிறது. பிறகு இரு இழைகளும் தாளத்தில் முரண்படத்துவங்குகின்றன. பிறகு இசையின் எண்ண வடிவான Motif பயன்பாட்டின்…