-
PODCAST SERIES: Ilaiyaraaja – a musical movement
Please visit links below for the Podcast series Spotify – Ilaiyaraaja : A Musical Movement Chapter Synposis Part 1 – Introduction Personal Connect – Film Music and the Need for a different look at it – Agenda of the Series Part 2 – Brief History of Music Music – God or Man made – Early…
-
பகுதி1: இளையராஜா எனும் இசையியக்கம்
இளையராஜாவின் பாடல்கள் பேரிசையியக்கங்களின் சுருக்கக் குறிப்புகளாக விளங்குகின்றன – பிரேம் ரமேஷ் (இளையராஜா – இசையின் தத்துவமும் அழகியலும் நூலில்) பிரேம் ரமேஷின் புத்தகத்தை முதலில் படித்த போது இசையை முறையாகக் கற்கவில்லை. பிறகு கற்கத் தொடங்கிய காலத்திலிருந்து இவ்வரிகள் நினைவுக்கு வராமல் இருந்ததில்லை. மேற்கத்திய செவ்விசை பயிற்சி தொடர்பாக கடந்த சில மாதங்களாக Bach இசையமத்த Cantatas எனும் வகை பாடல்களை கேட்டு வருகிறேன். இத்தொகுப்புகளில் பல்வேறு இடங்களில் ராஜா நினைவுக்கு வருவது உண்டு. பதங்களாக, துணுக்குகளாக, வடிவ…
-
நம் கண்பார்த்தும் கவனமில்ல
<> ராஜாவின் பாடல்கள் வாசிக்க கடினமானவை என்பது இசையைக் கற்பதற்கு முன்னால் இருந்த முழுமுடிவு. பிரமிப்பான எதுவுமே நமக்கு அப்பாற்பட்டதாகவும், அவ்வாறு அப்பாற்பட்டதாக இருந்தால்தான் நமக்கு பிரமிப்பும் என்பதுதானே வழக்கு. ஆனால் உண்மையில் இசை கற்கத்துவங்கிய சில மாதங்களிலேயே ஆற்றொழுக்கொடு இல்லாவிட்டாலும், பாடலின் சுரங்களை ஒருவாறு அனுமானித்து சேர்த்து, அவரது பாடல்கள் வாசிக்கக் கைக்கூடின. இங்கே குறிப்பது பாடல்களின் மையக்குரலிழை (vocal melody) மட்டுமே. முன்னிசை, இடையிசை, பாடல் பின்னணியிசை போன்றவை கருவியிசைக்கென அமைக்கப்பட்டவை, ஒப்பிட தேர்ச்சியைக்…
-
மாஃலரின் சிம்ஃபொனி – இறப்பும் இருப்புமான குழப்பமற்ற தெளிவின்மை
“நாற்றிசையும் நீளும் கதிர்கொள்ளிகள் நடுவே அணையாது எரியும் பரிதி இருள்” – சாவு (பிரமிள்) மாஃலரைப் (Gustav Mahler 1860-1911) போன்ற இசைஞரின் உலகிற்குள் முழுவதுமாக சென்றடைதல் எவ்வாறு அல்லது எப்போது கைக்கூடுகிறது? மிகச்சிறந்த இசைஞர்கள் சிறிது சிறிதாக கட்டியெழுப்பும் தனித்துவமான நுண்ணுலகம் நாளடைவில் கிட்டத்தட்ட தூலமானதாகிவிடுகிறது. அழகியல், வடிவமைப்பு, ஒலிநயம் என இசைமொழி துவங்கி, அதன் அகவெளிக்குள் நுழைவது என்பது ஒரு வேற்றிடத்திற்கு குடிபெயர்ந்து பழக்கப்படுவதைப் போன்ற சிக்கல்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. சில இசையுலகங்களில் இந்த…
-
ISIS – Panopticon (2004)
முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த ISIS (ஐசிஸ்) ஒரு அமெரிக்க இசைக்குழு. 1997 முதல் 2009 வரை இயங்கி, ஐந்து அருமையான இசைத்தொகுப்புகளை வழங்கிய மெட்டல் இசைக்குழு. இவர்களுக்கும் இன்று ஐசிஸ் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரும் தீவிரவாத குழுவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இணையத்தில் தேடுவடதே சிக்கலாகும் ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்தது இவர்களின் துரதிஷ்டமா அல்லது தங்கள் இசை குழுவிற்கு பெயிரிட இவர்கள் தேர்ந்தெடுத்த எகிப்திய பெண் தெய்வமான ஐசிஸின் துரதிருஷ்டமா… மெட்டல் இசைக்குத்…
-
தருமராஜ் வந்தார்..
தருமராஜின் அயோத்திதாசர் புத்தக வெளியீட்டு விழா சில குறிப்புகள் அயோத்திதாசர் புத்தகம் வெளியீட்டு விழாவின் அழைப்பிதழைப் பார்த்தவுடன் குழப்பமாக இருந்தது. விழா விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களின் தேர்வு குறித்த குழப்பமே அது. ஆனால் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் அயோத்திதாசர் குறித்து எந்த திசையிலிருந்து பேசுவார்கள் என்று யோசித்ததும் கொஞ்சம் துலங்கத் துவங்கியது. இந்த மூவரும் பொருத்தமான தேர்வு என்றும் தோன்றியது. இருந்தாலும் புனைவெழுத்தாளர்கள் மட்டும் ஏன் என்ற கேள்வி நீங்காமல் இல்லை. அதற்கும் விடை கிடைத்தது. விழாவில் பேசிய…
-
தமிழில் சிந்தித்தலும் தருமராஜின் எழுத்தும்
சிந்தனையே மொழியில் தான் நிகழ்கிறது எனும்போது, ‘தமிழில் சிந்திப்பது’ என்று தனியாக என்ன இருக்கிறது எனத்தோன்றலாம். இருப்பது போலத்தான் தெரிகிறது. ஒரு மொழிச்சூழலில் சிந்திப்பது அச்சூழலின் அறிதல், அறியாமை இரண்டின் பயனாலாகிறது. ஒரு உதாரணமாக இசை குறித்து தமிழில் சிந்தித்தலை எடுத்துக் கொள்வோம். இது பல்வேறு சிக்கல்களைத் தாங்கியது. இசையை ரசிப்பவர்கள், கற்றுக்கொள்பவர்கள், கோட்பாட்டாளர்கள், கலைஞர்கள் என அனைவரையும் வஞ்சனையில்லாமல் பாதிப்பது. இசையைப் புரிந்துகொள்ளவே முடியாது என்பதில் துவங்கி இசையே தெய்வீகம், அல்லது மரபு, செவ்விசையாக அறியப்படுவது…
-
இரு தலைமுறைகள் ஒரு துணுக்கிசை
1761 வருடத்தில் தனது 29 வயதில் ஜோசஃப் ஹைடன், ஆஸ்திரியா நாட்டின் பணக்காரக் குடும்பமான ‘எஸ்தர்ஹாசி’ (Esterhazy family) குடும்பத்தில் உதவி இசை-ஒருங்கிணைப்பாளராகத் தேர்வாகிறார். எந்த செவ்விசைப்பின்னணியும் இல்லாத குடும்பத்தில், வண்டிச்சக்கரங்களை பழுதுபார்க்கும் மாத்தியாஸ் ஹைடனுக்கு மகனாகப் பிறந்து, கொஞ்சம் கொஞ்சமாக இசை கற்று, பிறகு பகுதி நேர இசைப்பணிகளுக்காக அல்லாடிய ஹைடனுக்கு, ஐரோப்பாவின் மிகப்பணக்கார குடும்பங்களுள் ஒன்றான ‘எஸ்தரஹாசி’ குடும்பத்தில் வேலை கிடைத்தது பெரும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். அவ்வருடம் துவங்கி, சுமார் 30…
-
பகுதி 27 : பல்லவியிலியிலிருந்து சரணத்திற்கு சென்று சேர்க்கும் இடையிசை
பனிவிழும் இரவு பாடலின் பல்லவியின் அமைப்பையும், இயக்கத்தையும் குறித்துக் கண்டோம். இப்பல்லவியானது இசையின் சொற்றொடர் அமைப்புகளுள் ஒன்றான, Sentence வகையினைச் சார்ந்தது. Sentence வகையிலான இசைச்சொற்றொடர், தோற்றம், வளர்ச்சி, மறைவு எனும் பகுதிகளைக் கொண்டது. தோற்றப் பகுதி கருப்பொருளை வழங்குகிறது, பிறகு அக்கருப்பொருள் வளர்க்கப்படுகிறது, பிறகு நிறைவு செய்யப்படுகிறது. பனிவிழும் இரவு பாடலின் பல்லவி இம்மூன்று பகுதிகளையும் அவற்றின் இயக்கத்தையும் எவ்வாறு கொண்டமைகிறது எனக் கண்டோம். இனி அதன் சரணத்தின் அமைப்பையும் இயக்கத்தையும் குறித்து காண உள்ளோம்.…
-
பீதோவன் முடிவும் ஸ்ட்ராஸ் துவக்கமும்
பீதோவன் என்ற பெயரோடு பொதுவாக நினைவுக்கு வருவது அவரது சிம்ஃபொனி இசை. இன்று உலகம் முழுதும் அவரது ஒன்பது சிம்ஃபொனி இசைத்தொகுப்புகள் பிரபலமானவை. ஆனால் அவரது இசைப்படைப்புலகின் மையமாக கருதப்படவேண்டியவை, அவர் இயற்றிய பியானோ சொனாட்டாக்கள். பீதோவன் மொத்தம் முப்பத்தியிரண்டு சொனாட்டாக்களை இயற்றியுள்ளார். இவை அவரது வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் இயற்றப்பட்டவை. அவரது இசை மற்றும் ஆன்மத் தேடலின் வெளிப்பாடாக விளங்குபவை. ஹைடனின் மாணவரான அவர், தனது இருபத்தைந்தாவது வயதில் முதல் சொனாட்டாவை இயற்றுகிறார். ஆசிரியரிடத்தில் சில…
-
பகுதி 26: பல்லவியின் அமைப்பும் இயக்கமும்
சென்ற பகுதியில், பலதள இசையிலிருந்து இரு தள இசையாக மாறும் Classical கால இசையின், பின்னணி தளமாகிய Harmony குறித்துக் கண்டோம். இசையின் கீழ்தளமான Harmony, மேல்தளத்திற்கான சூழலை உருவாக்கும் தளமாகிறது. சுரங்களைக் கூட்டாக (Chords) இசைப்பதன் மூலம் ஒரு தொனிமையத்தை, அதன் மூலம் ஒரு ஈர்ப்பை Harmony உருவாக்குகிறது என்றும், அத்தகைய ஈர்ப்பு அல்லது விலக்கத்தை எவ்வாறு வளர்க்கிறது என்றும், எவ்வாறு நிறைவு செய்கிறது என்றும் கண்டோம் (Tension and resolution of Tension). இப்பகுதியில்…
-
பகுதி 25: Harmony – அடித்தளம் மற்றும் விரிவாக்க முறைகள்
“Watch the Harmony….Watch the Bass line….Watch the Root progressions” – Arnold Schoenberg மேலுள்ள துணுக்கைக் கேட்கும் போது, பாடல்வரிகளைக் கடந்து, உணர்வனுபவங்களைக் கடந்து, கருவி மற்றும் குரலின் வண்ணப் பூச்சுக்களைக் கடந்து, மேலுள்ள வெறும்கூடான ஒலியனுபவத்தில், ஒரு ஒழுங்கும், முதலில் இருந்து இறுதி வரை குழப்பமற்ற சீரான ஓட்டமும் கொண்டதாக நம்மால் உணர முடிகிறதல்லவா. தனக்கான துவக்கப்புள்ளிகள் (“பனிவிழும் இரவு”), உச்சப்புள்ளிகள் (“தனிமையே போ இனிமையே வா”), நிறைவுப்புள்ளிகள் (“நீரும்,வேரும் சேர வேண்டும்”)…
-
பகுதி 24: முரணிசையிலிருந்து ஒத்திசைவிற்கான நகர்வு
இது வரையில் நாம், மேற்கின் மத்திய காலத்தில் உருவாகி, மறுமலர்ச்சி காலத்தில் வலுப்பெற்று, Baroque காலத்தில் உச்சமடைந்த Counterpoint இசை குறித்தும், அக்காலத்தின் முக்கிய இசைவடிவங்கள் குறித்தும் கண்டோம். Counterpoint இசையின் உரையாடல் வடிவம். இசையில் சிந்திக்க மனிதன் துவங்கிய போது, இசையின் எண்ண வடிவான Musical Motif வலுப்பெற்ற உடன், அதனைக் கொண்டு கருத்தைச்சொல்லவும், அதற்கு சார்பாகவும், எதிராகவும் கருத்துக்களை அடுக்கி அதனைப் பல்லிழை இசையாக மாற்றிய இசையமைப்பு முறை Counterpoint. இந்த இசைநுட்பத்தின் விளைவாகத்…